Sunday, 6 March 2016

மனதில் ஒரு மழை

முகில்கள்களின் வருடாந்திர பரிசாக பருவமழை
உடைகிறது மௌனம் ,பொழிகிறது வானம்
வரண்டுவிட்ட புவியில் மகிழ்ச்சி வெள்ளம்
விரிசல்கள் ஆறுகளாக பச்சை கிளைகள் உலகமெங்கும்

ஒட்டுக்கூரைகளின் சிரிப்பும்,மண்ணின் வாசமும
அறைக்குள் ஜன்னலின் சாரலும் ,வெளியில் கொஞ்சும் அடிகளும்
மறந்ததும் மறைந்ததும் விழிகளில் மலர்வது ஏனோ
மழையினால் அழிக்க முடியாத விழிகளின் வழிகள்

உன் புன்னகை கேட்டதும் உன் பாடலை பார்த்ததும்
விழித்த கண்களை மறைத்து நான் உன்னை அணைத்ததும
கண்ணின் அசைவினால் ஒரே இசை ரசித்ததும்
வாழ்கையின் உண்மை நம் காதலின் கண்ணை துடைத்ததும்

ஞாபகங்கள் வானத்தை மறைக்கும் பருவமழையில்
வருத்தங்கள் மௌனத்தை உடைக்கும் தருணங்களில்
மனம் வழிகின்றது ஆசைகளின் பெருமழையில்
இந்த மழை அழைக்கும் வசந்தம் கனவா இல்ல நனவா

2 comments: