மகள்
இரண்டாவதாக மகன் பிறந்த மகிழ்ச்சி நான் பகிர்ந்து கொள்ள
பக்கத்து வீட்டு பாட்டி சொன்னாள் என் காதில்
பாசம் என்னவென்று தெரிய ஒரு மகள் வேண்டும்
அப்பொழுது ஓன்றும் தோன்றவில்லை
பகல்கள் இரவுகளாக பல திங்கள் ஓட
ஞாயிறும் திங்களுமாக மகன்கள் வளர
குமரன்,பிள்ளையார் போல் அவர்கள் எங்களை
சுற்றி வந்த காலங்களும் ஞாபகங்களாக...
இப்பொழுது தோன்றுகிறது ....
வீட்டிற்கு வந்து சேர சில நொடிகள் தாமதமானால்
கைபேசியில் அழைத்து செல்லச்சண்டை போடவும்
அவளை விட்டு விலகியிருக்கும் நேரங்களில்
கைபேசியில் அழைக்காவிட்டால டு போடவும்
வீதி வரை செலவதர்றகும் கூட துணை கேட்கவும்
மாலை இரவாகும் பொழுது வாசல் தீண்டாவிட்டால்
ஆவலுடன் காத்திருக்கவும் வந்து விட்டால் கட்டி அணைக்கவும்
செல்லம் கொடுத்து மகிழவும் ..
ஆம் ,ஒரு மகள் வேண்டும் தான்.
No comments:
Post a Comment