Tuesday, 26 January 2016

அழைப்பு



தெருவுக்கு இருபுறமும் பள்ளியில் குழந்தைகள் நிற்பது போல் அக்ரஹாரத்து வீடுகள். கோவிலை நோக்கி மெல்லமாக நடந்து கொண்டிருந்தேன் . தானே வரைத்த சிவப்பு ஓவியத்தின் அழகை ரசித்து கொண்டு மாடியேறுவதரக்கு சோம்பலாக இருந்தது ஞாயிறு.
கோபுரத்தை நெருங்க ஒரு அம்பாசிடர் கார் என் பார்வைக்கு வந்தது. எங்கேயோ  பார்த்த ஞாபகம்,காரையும் அதில் உடகாந்திருந்த முகத்தையும். என்னை பார்க்கவும் அந்த முகம் மடிச்சார் புடவயும் வைரத்தோடுமாக கமலாமாமியின் உருவத்தில் அவதரித்தார்.
"எப்ப வந்தாய் ?" புன்னகையுடனான கேள்வி.
"இன்னைக்கு காலேலெ தான் மாமி," என்று நான் சொல்ல,மாமி திரும்பவும் கேட்க்கிறாள்.
"ஆத்தில யாரிருக்கா?"
தேவையற்ற கேள்வி.பல வருடங்களுக்கு முன் போன அம்மா,ஓரிரு வருடங்களுக்கு முன் மரைந்த அப்பா. தொலைவில் இருக்கும் நகரத்திலிருந்து விடுமுறைக்கு மட்டும் கிராமத்துக்கும் வீட்டிற்கும் வந்து எட்டி பார்ககிறவன் நான் என்பது மாமிக்கும் தெரிந்தது தான்.

" யாரும் இல்லை" பதில் சொல்ல மாமி அடுத்த கேள்வி எழுப்பினார் .


"அப்ப சாப்பாடெல்லாம் எப்படி?"

"அதான் நம்ம அய்யர் ஹோட்டல் இருக்கே" என்றேன் நான்.

"ஏன் ,எங்காத்துக்கு வரலாமே," மாமி சொன்னாள்."அங்க நானும் மாமாவும் மட்டும் தானே இருக்கோம்"

ஒரு முப்பது வருடங்களுக்கு முன் எனில் ,மனதை குளிர வைத்திருக்கும்,அந்த அழைப்பு.பாதி மூடியிருக்கும் கதவின் மறைவில் இருந்து புறப்படும் ராதிகாவின் கொலுசின் ஒலி.அம்மாவின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல சொல்ல,அடக்கமாக மொழியும் மழை போல அவளுடைய மூச்சு சத்தம்...யாருக்கும் தெரியாமல் கடந்த வருடம் கோவில் தேர் திருவிழா அன்று நான் கொடுத்த வளைகளின் கலகலப்பு...

"வேண்டாம் மாமி, இன்னக்கு ஒரு கல்யாண அழைப்பு இருக்கே.."என்று சொன்னேன் நான்.

வெளிநாட்டில் கணவருடனும் மகிழச்சியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் ராதிகாவை வெளியில் நிற்கவைத்து கோவிலுக்குள் நுழைந்தேன் .

Saturday, 9 January 2016

மகள்


மகள்

இரண்டாவதாக மகன் பிறந்த மகிழ்ச்சி  நான் பகிர்ந்து கொள்ள
பக்கத்து வீட்டு பாட்டி சொன்னாள் என் காதில்
பாசம் என்னவென்று தெரிய ஒரு மகள் வேண்டும்
அப்பொழுது ஓன்றும் தோன்றவில்லை

பகல்கள் இரவுகளாக பல திங்கள் ஓட
ஞாயிறும் திங்களுமாக மகன்கள் வளர
குமரன்,பிள்ளையார் போல் அவர்கள்  எங்களை
சுற்றி வந்த காலங்களும்  ஞாபகங்களாக...

இப்பொழுது தோன்றுகிறது ....


வீட்டிற்கு வந்து சேர சில நொடிகள் தாமதமானால்
கைபேசியில் அழைத்து செல்லச்சண்டை போடவும்
அவளை விட்டு விலகியிருக்கும் நேரங்களில்
கைபேசியில் அழைக்காவிட்டால டு போடவும்

வீதி வரை செலவதர்றகும்  கூட துணை கேட்கவும்
மாலை இரவாகும் பொழுது வாசல் தீண்டாவிட்டால்
ஆவலுடன் காத்திருக்கவும் வந்து விட்டால் கட்டி அணைக்கவும்
செல்லம் கொடுத்து மகிழவும் ..

ஆம் ,ஒரு மகள் வேண்டும்  தான்.